புனித நீரால் துர்க்கையம்மனுக்கு மகா அபிஷேகம்..!

Advertisements

காரைக்காலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற  சண்டி மஹா ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள சோமநாதர் ஆலயத்தில், 40-ஆம் ஆண்டு சண்டி மஹா யாகம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு, பட்டுப் புடவைகள் மற்றும் பழ வகைகளை ஹோம குண்டத்தில் அர்ப்பணித்து  துர்க்கையம்மனை வழிபட்டனர். யாகத்தை முன்னிட்டு அம்மனுக்குப் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
விழாவின் நிறைவாக, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசத்தைச் சிவாச்சாரியார் சுமந்து வர, ஆலயத்தை வலம் வந்த பின் அந்தப் புனித நீரால் துர்க்கையம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கோயில் அறங்காவலர் குழுவினர், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *