
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் சாணார் பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது.
இரவுப் பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலைப் பூசாரி பூட்டிச் சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மகும்பல் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.
மேலும் பூஜை அறையில் இருந்த பித்தளை பூஜை பொருட்களையும் சுருட்டி சென்று விட்டனர்.
பொன்னேரி அடுத்த திருவாயர் பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இன்று காலைக் கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம கும்பல் அள்ளிச் சென்று இருந்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
