
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்திய ஏசிடிசி நிறுவனம்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் 30 ஆண்டு கால இசை வாழ்க்கையை சிறப்பிக்கும் விதமாக ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி கிழக்கு கடற்கரை சலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வருகை தந்ததால், இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டது. அதிகபட்சமாக ரூ.20,000 வரை டிக்கெட் எடுத்தவர்கள் இசை நிகழ்ச்சியைக் காண முடியாத நிலை ஏற்பட்டது. பெரும்பாலானோர் நிகழ்ச்சி நடைபெறும் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாத ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்து வந்தது. இந்தச் சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தாரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே நடந்த குளறுபடிக்குத் தானே பொறுப்பேற்று, நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்களின் டிக்கெட் பணத்தை திரும்பத் தருவதாக அறிவித்தார். அதன்படி 400 க்கும் மேற்பட்டோருக்கு பணம் திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சூழலில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலி, 20,000 பேருக்கு அனுமதி பெற்று விட்டு 45000 பேருக்கு டிக்கெட் விற்பனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
They Rahmaan…!! What about
This child who cried.
Girls who were molasted.
Guys who were trashed.
Traffic caused for parking.They should share ticket too ? What a joke.#ARRahmanConcert #ARRahman #ARRConcert pic.twitter.com/5T2x98Tc3O
— Sanghi Prince🚩 (@SanghiPrince) September 11, 2023

