
தில்லியில் நடைபெற்ற ஐ.பி.எல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.
தில்லியில் ஐ.பி.எல் 34 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வை செய்தது. இதன் படி முதலில் விளையாடிய குஜராத் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. இதில், அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 100 ரன்களும், சுப்மன் கில் 32 ரன்களும் குவித்தனர்.
பந்து வீச்சு தரப்பில் பெங்களூரு அணியின் புவனேஷ்வர் குமார்,ஜோஷ் ஹேசல்வுட், சுயாஷ் சுர்மா ஆகியோர் தலா ஓரு விக்கெட்களை வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதில் அதிகபட்சமாக விராத் கோலி 81 ரன்களும் தேவ்தத் படிகல் 55 ரன்களையும் குவித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு வழிவகைச் செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ஐ.பி.எல் தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவுச் செய்துள்ளது.



