பல்நோக்கு மையக் கட்டிடம், உடற்பயிற்சி கூடம் திறந்து வைத்தார் – அமைச்சர் சேகர்பாபு!

Advertisements

அம்பத்தூர் வெங்கடாபுரம், பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.

தொடர்ந்து ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், நிலை குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், கமல், ராஜகோபால், நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *