
புத்தாண்டு பலன் – 2023 (மேஷம் முதல் கன்னி வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )

எந்த செயலிலும் தைரியத்தோடு செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் வரும் 2023-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட இருக்கிறது.
ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் வரும் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் சகல விதத்திலும் குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து முன்னேற்றமான நிலை உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலைகள் எல்லாம் முழுமையாக விலகி நல்ல வளர்ச்சியினை அடையும் யோகம், சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும் நிலை ஏற்படும்.
தொழிலில் லாபம், தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு எல்லாம் குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. நல்ல பதவிகள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும்.
தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சர்ப்ப கிரகமான ராகு, கேது 30-10-2023 முடிய 1, 7-ல் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் நெருங்கியவர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
ஆண்டுக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும், 22-04-2023 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க உள்ளது அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூற முடியாது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
ஏப்ரலுக்கு பிறகு குரு பார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் நிலவக்கூடிய சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் கூட சற்று விலகி ஒற்றுமை அதிகரிக்க கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்து வகையில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பங்காளி வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடுவதில் சிறிது தடைகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடி இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த அலைச்சல்கள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். மனைவி, பிள்ளைகளின் அரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். பண வரவுகள் மிக சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும். சுபகாரிய முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும்.
உத்தியோகம்
எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பணி சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உங்கள் தகுதிக்கு ஏற்ற பதவிகள் தேடி வரும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனைந்து வாழ முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை முற்றிலும் விலகி நல்ல லாபத்தை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இனைவார்கள். போட்டி பொறாமைகள் விலகி நல்ல முன்னேற்றத்தை தொழிலில் அடைய முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி ஆதாயம் அடைவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும்.
அரசியல்
எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பெற்று நல்ல பதவியை அடைவீர்கள். நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருந்தால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்கள் தனி திறமைகளை வெளிபடுத்த சிறப்பான சந்தர்ப்பங்கள் அமையும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைப்பதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
விவசாயிகள்
புழு பூச்சிகளால் இருந்த தொல்லைகள் குறைந்து பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையினை சந்தையில் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். நவீன கருவிகள் வாங்கி விவசாயத்தில் புதிய முறைகளை கையாள்வீர்கள்.
பெண்கள்
கடந்த கால உடல் உபாதைகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும்.
மாணவ மாணவியர்
மாணவ மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். மேற்படிப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. பயணங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நன்மை அளிக்கும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளைப் பெற முடியும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, பேச்சில் பொறுமையுடன் இருப்பது, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் முடிப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கையில் இருப்பதை கொண்டு செலவுகள் செய்வது நல்லது. நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது உத்தமம். துர்க்கையம்மன், முருகர் வழிபாடு நற்பலனை உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 17-01-2023 பகல் 01.00 மணி முதல் 19-01-2023 பகல் 03.17 மணி வரை.
பிப்ரவரி
மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய காலமாகும். சனி, சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகி அனுகூலப் பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவப் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பைரவர், தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 13-02-2023 இரவு 08.37 மணி முதல் 15-02-2023 இரவு 12.45 மணி வரை.
மார்ச்
உங்கள் ராசிக்கு 11-ல் சனி, மாத முற்பாதியில் சூரியன், புதன் 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணம் வரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிட்டும். சொந்த வீடு, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உங்கள் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். அஷ்டலட்சுமி, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 13-03-2023 அதிகாலை 02.18 மணி முதல் 15-03-2023 காலை 07.33 மணி வரை.
ஏப்ரல்
ராசியாதிபதி செவ்வாய் 3-ல், சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்தால் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் உண்டாகும். சூரியன் 12-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் சாதகப் பலன்களை அடைய முடியும். சிவனையும், அம்மனையும் வழிபடுவது நற்பலனை தரும்.
சந்திராஷ்டமம் – 09-04-2023 காலை 08.01 மணி முதல் 11-04-2023 பகல் 12.58 மணி வரை.
மே
ஜென்ம ராசியில் ராகு, 1,2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் குழப்பங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். சனி 11-லும், மாத தொடக்கத்தில் செவ்வாய் 3-லும் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 06-05-2023 மாலை 03.22 மணி முதல் 08-05-2023 இரவு 07.10 மணி வரை.
ஜுன்
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். இதனால் கடந்த காலங்களில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். முருகரையும், அஷ்டலட்சுமியையும் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 02-06-2023 இரவு 12.28 மணி முதல் 05-06-2023 அதிகாலை 03.23 மணி வரை மற்றும் 30-06-2023 காலை 10.20 மணி முதல் 02-07-2023 பகல் 01.18 மணி வரை.
ஜுலை
உங்கள் ராசிக்கு சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லது நடக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சர்பேஸ்வரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 27-07-2023 இரவு 07.29 மணி முதல் 29-07-2023 இரவு 11.35 மணி வரை.
ஆகஸ்ட்
ஜென்ம ராசியில் ராகு, மாத முற்பாதியில் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன், உடல் சோர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும், ராசியதிபதி செவ்வாய் மாத பிற்பாதியில் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடைவீர்கள். அசையும், அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். சிவனையும், விநாயகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 24-08-2023 அதிகாலை 02.54 மணி முதல் 26-08-2023 காலை 08.37 மணி வரை.
செப்டம்பர்
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சகல விதத்திலும் மேன்மையை தரக்கூடிய இனிய அமைப்பாகும். தாராள தனவரவுகள், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலப் பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். மகாலட்சுமி, குரு பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 20-09-2023 காலை 08.45 மணி முதல் 22-09-2023 மாலை 03.35 மணி வரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருந்து உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். செவ்வாய், கேது 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் கடன்கள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்த வரை சிக்கனமாகவும், ஆடம்பர செலவுகளைக் குறைத்து கொள்வதும் நல்லது. முருக வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 17-10-2023 பகல் 02.20 மணி முதல் 19-10-2023 இரவு 09.03 மணி வரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் விலகி அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் பேச்சை குறைப்பது நல்லது. சிவன், முருக வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் – 13-11-2023 இரவு 09.17 மணி முதல் 16-11-2023 அதிகாலை 03.00 மணி வரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதையும் சமாளித்து ஏற்றமானப் பலனை பெறுவீர்கள். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். முருக வழிபாடு, துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 11-12-2023 காலை 06.10 மணி முதல் 13-12-2023 பகல் 11.05 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9, நிறம் – ஆழ்சிவப்பு கிழமை – செவ்வாய்
கல் – பவளம் திசை – தெற்கு தெய்வம் – முருகன்
ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )

நவகிரகங்களில் சுக காரகன் சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள் ஆடம்பர வாழ்வில் அதிகம் நாட்டம் கொண்டவராகவும் நவீனகரமான பொருட்களை அனுபவிப்பதில் அலாதி பிரியம் கொண்டவராகவும் விளங்கக்கூடிய உங்களுக்கு, வரும் 2023-ஆம் ஆண்டில் சிக்கனத்தோடு செயல்பட்டால் தான் அனைத்தையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடைய முடியும்.
2023—ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய யோகங்கள் உண்டு, கேது உங்கள் ராசிக்கு 6-ல் 30-10-2023 வரையும் அதன் பிறகு ராகு 11-லும் சஞ்சரிப்பதால் கிடைக்க வேண்டிய நேரத்தில் தகுந்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பதால் வளமான பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களில் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் எடுக்கின்ற பணிகளில் சிறு சிறு இடையூறு இருந்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் வரும் 17-01-2023 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால் தான் அனுகூலங்களை அடைய முடியும். பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்காது என்பதால் நீங்கள் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நன்று. கூட்டாளிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்களை சார்ந்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை சற்று கூடுதலாக இருக்கும் நிலை, மற்றவர்கள் பணியும் சேர்த்து நீங்கள் செய்யக்கூடிய ஒரு சூழல் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான சன்மானத்தை அடைவதில் ஒரு சில இடையூறுகள் இருக்கும் என்றாலும் உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.
ஆண்டுகோள் என வர்ணிக்க படக்கூடிய குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான நிலை, திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய யோகங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
வரும் 22-04-2023-க்கு பிறகு குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது அதனை ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்துவது மிகவும் உத்தமம்.
பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் அளிப்பது போன்றவற்றை வரும் நாட்களில் தள்ளி வைப்பது நல்லது. எதிலும் பெரியோர்களின் ஆசியுடன் அவர்களின் ஆலோசனை கேட்டு செயல்பட்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். தொழில், வியாபார விஷயங்களில் எதிலும் சுயமாக செயல்படாமல் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படுகின்ற பொழுது வீண் செலவுகளையும், இழப்புகளையும் தவிர்த்து போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்பு உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உங்களுக்கு ஏற்படும் வேலைபளு காரணமாக உடல் சோர்வு ஏற்படும் என்றாலும் உங்களது மனோ தைரியத்தால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எல்லாம் இருந்தும் அனுபவிக்கத் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் உங்களது அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். ஆண்டின் தொடக்கத்தில் திருமண சுப காரிய முயற்சிகளில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும்.
உத்தியோகம்
மேலதிகாரிகளின் கெடுபிடிகள், வேலைபளு போன்றவைகளால் பல சங்கடங்களை சந்தித்தாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்க இடையூறுகள் உண்டாகும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். ஊதிய உயர்வுகள் தக்க சமயத்தில் கிடைக்கும் என்றாலும் குடும்பத்தில் ஏற்படும் வீண் செலவுகளால் தேவையற்ற நெருக்கடி உண்டாகி மன நிம்மதி குறையும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டி பொறாமைகள், அலைச்சல், டென்ஷன் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றங்களை அடைவீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் சாதகமான பலன் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பணவரவுகளில் இழுபறி நிலை தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களின் உதவியால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து எதையும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
அரசியல்
கட்சிப் பணிக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பாராத உதவிகளால் பொருளாதார நிலையில் மேம்பாடுகள் உண்டாகி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம்.
கலைஞர்கள்
கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் மன அமைதியை குறைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் அனுகூலங்கள் ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி இருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகம் ஏற்படும் என்றாலும் அதற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். அரசு வழியில் கிடைக்கும் உதவியால் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நல்ல வரன்கள் தேடி வரும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
மாணவ மாணவியர்
கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்கள் உண்டாகும் என்பதால் எச்சிரிக்கையுடன் செயல்படவும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
ஜென்ம ராசியில் செவ்வாய், மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குரு 11-ல் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உற்றார் உறவினர்களிடையே பேச்சில் பொறுமையுடன் இருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிவன், அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 19-01-2023 பகல் 03.17 மணி முதல் 21-01-2023 பகல் 02.53 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 9, 10-ல், சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறையும். குரு 11-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார மேன்மையால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். விஷ்ணு வழிபாடு நன்மை தரும்
சந்திராஷ்டமம் – 15-02-2023 இரவு 12.45 மணி முதல் 18-02-2023 அதிகாலை 01.48 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு சூரியன், புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். குரு 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். தடைப்படட சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். முருகரையும் விநாயகரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 15-03-2023 காலை 07.33 மணி முதல் 17-03-2023 காலை 10.48 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன், குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலனைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகளை பெற்று விடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் வேலைபளு அதிகம் இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். மகாலட்சுமி, விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் -11-04-2023 பகல் 12.58 மணி முதல் 13-04-2023 மாலை 04.22 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, வரும் 10-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றலை அடைவீர்கள். தனவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம் – 08-05-2023 இரவு 07.10 மணி முதல் 10-05-2023 இரவு 09.50 மணி வரை.
ஜுன்.
மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செவ்வாய் 3-ல், கேது 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று தேக்க நிலை ஏற்பட்டாலும் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவன், துர்க்கையை வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 05-06-2023 அதிகாலை 03.23 மணி முதல் 07-06-2023 அதிகாலை 04.40 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு செவ்வாய் 4-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி அமையும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். சுபகாரிய முயற்சிகளை தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. சூரியன் மாத பிற்பாதியில் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை சிறு தடைக்குப் பிறகு பெறுவீர்கள். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு, சனி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 02-07-2023 பகல் 01.18 மணி முதல் 04-07-2023 பகல் 01.43 மணி வரை மற்றும் 29-07-2023 இரவு 11.35 மணி முதல் 31-07-2023 இரவு 12.15 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனைவரின் ஆதரவையும் பெற முடியும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் எடுத்த பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். துர்க்கையம்மன், முருகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 26-08-2023 காலை 08.37 மணி முதல் 28-08-2023 காலை 10.40 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். செவ்வாய் 5-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு உங்கள் கையிருப்பு குறையும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சலும், ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிவ வழிபாடும், குரு பகவான் வழிபாடும் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 22-09-2023 மாலை 03.35 மணி முதல் 24-09-2023 இரவு 07.18 மணி வரை.
அக்டோபர்.
ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 19-10-2023 இரவு 09.03 மணி முதல் 22-10-2023 அதிகாலை 01.38 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 6-ல் சூரியன், செவ்வாய், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட்டாலும் எடுக்கும் பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி நிலவினாலும் உங்களின் திறமையால் நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிப்பதுடன் அதற்கான ஆதாயங்களையும் அடையும் யோகம் உண்டு. சனிக்கு எள் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 16-11-2023 அதிகாலை 03.00 மணி முதல் 18-11-2023 காலை 07.00 மணி வரை.
டிசம்பர்.
ஜென்ம ராசிக்கு 7, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், குடும்பத்தில் ஒற்றுமை குறையும் என்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிப்பதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 13-12-2023 பகல் 11.05 மணி முதல் 15-12-2023 பகல் 01.45 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8 நிறம் – வெண்மை, நீலம், கிழமை – வெள்ளி, சனி
கல் – வைரம் திசை – தென்கிழக்கு, தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி
மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் ஒவ்வொரு செயலிலும் சூழ்நிலைக்கு தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லவராகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கக்கூடிய உங்களுக்கு வரும் 2023-ஆம் ஆண்டு மிகப் பெரிய ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஆண்டாக இருக்கும். மிதுனத்தில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை மேன்மை அடைந்து சகல விதத்திலும் ஏற்றங்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த சிறு சிறு பாதிப்புகள் கூட தற்போது முழுமையாக விலகி பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். வீண் மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை இருக்கும்.
சர்பகிரகமான ராகு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் 30-10-2023 வரை சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான குரு ஆண்டின் தொடக்கத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறிது தேக்கமான நிலையை நீங்கள் எதிர்கொண்டாலும் வரும் 22-04-2023 முதல் குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் பலம், உங்களுக்கு இருந்த கடன்கள் எல்லாம் குறைய கூடிய சூழல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் எல்லாம் மறைவது மட்டுமில்லாமல் எதிரிகள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய சூழல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவிற்கு நல்ல லாபத்தை அடைவது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும்.
தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் முழுமையாக விலகி அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை தற்போது பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மேலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக உங்களின் மன கவலைகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும். உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக இருந்த சுணக்கமான நிலை மாறி குடும்பத்தில் மகிழ்ச்சி, அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய யோகமும் உயர் பதவியை அடையக்கூடிய அதிர்ஷ்டமும் ஏற்படும். இவ்வாண்டில் கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது.
உடல் ஆரோக்கியம்
சனி 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் கடந்த கால உடம்பு பாதிப்புகள் விலகி மன நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி, பிள்ளைகளுக்கு இருந்த ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. வெளியூர் பயணங்கள் மூலம் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகும். சனி பாக்கிய ஸ்தானத்தில் திருக்கணிதப்படி 17-01-2023 முதல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிக சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சியில் ஏப்ரலுக்கு பிறகு முயற்சி செய்தால் எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியும், எதிர்பாராத பதவி உயர்வுகளையும், விரும்பிய இடமாற்றங்களையும் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் கடினமாக பணிகளையும் எளிதில் முடித்து விடலாம். உயரதிகாரிகளிடம் இருந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மறைந்து பணியில் மன நிம்மதி ஏற்படும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
தொழில், வியாபாரம்
உங்களுக்கு இருக்கும் மந்த நிலை முழுமையாக விலகி தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் நீங்கள் நினைத்தது நடக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும், பொருளாதார அனுகூலங்களும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்வர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது மூலம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறைகளில் உள்ளவர்கள் வரும் நாட்களில் லாபகரமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை படிப்படியாக குறையும் என்றாலும் ஏப்ரலுக்கு பிறகு மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் சற்றே இழுபறி நிலையில் இருந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அரசியல்
கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து நல்ல நிலையை அடைவீர்கள். மாண்புமிகு பதவிகள் உங்களை தேடி வரும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருந்தாலும் அதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி படிப்படியாக முன்னேறும் நிலை உண்டாகும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெற முடியும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானம் தற்போது கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் குறைவதால் மன அமைதி ஏற்படும். இசை துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். சக கலைஞர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் வரும் நாட்களில் அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
பெண்கள்
பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்ப தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்தால் சேமிக்க முடியும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகி ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். புத்திர வழியில் பூரிப்பினை பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடைய முடியும். ஆரோக்கியத்துடன் இருக்க உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக இருப்பது உத்தமம். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் வெல்ல முடியும். கல்விக்காக பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது, தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள், எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் உண்டாகும். சிவபெருமானையும் முருகரையும் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 21-01-2023 பகல் 02.53 மணி முதல் 23-01-2023 பகல் 01.50 மணி வரை.
பிப்ரவரி.
செவ்வாய் 12-ல், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். ராகு 11-ல் இருப்பதால் பொருளாதார நிலையானது ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடக்கப் பழகிக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் லாபங்கள் தடைப்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். முருக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 18-02-2023 அதிகாலை 01.48 மணி முதல் 20-02-2023 அதிகாலை 01.15 மணி வரை.
மார்ச்.
ஜென்ம ராசிக்கு 9, 10-ல் சூரியன், புதன், 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், நினைத்தது நடக்கும் நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறைந்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமானப் பலன்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றமான நிலைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். முருகரையும், பைரவரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 17-03-2023 காலை 10.18 மணி முதல் 19-03-2023 பகல் 11.17 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், 11-ல் புதன், ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் ஏற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக இருந்த தேக்க நிலை மாறி முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பொறுப்புடன் கூடிய பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வரும் 22-தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாக குறையும். விநாயகர், அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 13-04-2023 மாலை 04.22 மணி முதல் 15-04-2023 மாலை 06.44 மணி வரை.
மே.
ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, ராகு, புதன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் நடக்கும் வாய்ப்பு, தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சியை அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் நிம்மதி நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கான வாய்ப்புகள் அமையும். அஷ்டலட்சுமி, விநாயகர் வழிபாடு நன்மைகளை தரும்.
சந்திராஷ்டமம் – 10-05-2023 இரவு 09.50 மணி முதல் 12-05-2023 இரவு 12.19 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு குரு, ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த இடையூறுகள் விலகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செவ்வாய் 2-ல், மாத முற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். சிவன், முருகன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 07-06-2023 அதிகாலை 04.40 மணி முதல் 09-06-2023 காலை 06.02 மணி வரை.
ஜுலை.
ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு சிறப்பான ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் கடன் பிரச்சினைகள் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கூட கைகூடும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவும் நினைவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் உயர்வுகளும், இடமாற்றங்களும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து நடந்து கொண்டால் லாபகரமான பலன்களை பெற முடியும். மகாவிஷ்ணுவையும், விநாயகரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 04-07-2023 பகல் 01.43 மணி முதல் 06-07-2023 பகல் 01.38 மணி வரை மற்றும் 31-07-2023 இரவு 12.15 மணி முதல் 02-08-2023 இரவு 11.25 மணி வரை.
ஆகஸ்ட்.
ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, ராகு, மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் உங்கள் வாழ்க்கை தரம் மேலோங்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் வாய்ப்பு ஏற்படும். சிவ வழிபாடு, மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 28-08-2023 காலை 10.40 மணி முதல் 30-08-2023 காலை 10.18 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 11-ல் குரு, ராகு, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மந்த நிலைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த கெடுபிடிகள் விலகும். விநாயகரை வழிபடுவது, செவ்வாய் கிழமை முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் – 24-09-2023 இரவு 07.18 மணி முதல் 26-09-2023 இரவு 08.28 மணி வரை.
அக்டோபர்.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 4, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது, பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல்கள், ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 22-10-2023 அதிகாலை 01.38 மணி முதல் 24-10-2023 அதிகாலை 04.22 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். குரு வக்ர கதியில் இருப்பதால் பண விஷயத்தில் கவனமாக செயல்பட்டால் ஏற்றமிகுந்த பலன்களை அடையலாம். துர்க்கை, பெருமாள் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 18-11-2023 காலை 07.00 மணி முதல் 20-11-2023 காலை 10.07 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 5-ல், செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். அஷ்டலட்சுமி வழிபாடு, பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 15-12-2023 பகல் 01.45 மணி முதல் 17-12-2023 மாலை 03.45 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8, நிறம் – பச்சை, வெள்ளை, கிழமை – புதன், வெள்ளி
கல் – மரகதம் திசை – வடக்கு தெய்வம் – விஷ்ணு
கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

சந்திரனின் ராசியில் பிறந்து சிறந்த கற்பனை திறனும், மற்றவர்களை கவரும் பேச்சுத் திறனும் கொண்ட கடக ராசி நேயர்களே, எடுக்கும் செயல்களில் விடா முயற்சியுடன் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படக்கூடிய உங்களுக்கு வரும் 2023-ஆம் ஆண்டில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 முடிய பாக்ய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் இந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்கள் உங்களின் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும் நீங்கள் எண்ணியதை செயல்படுத்துவது என்றால் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்வது நல்லது.
திருமண முயற்சிகள் ஆண்டில் தொடக்கத்தில் மேற்கொண்டால் அதில் அனுகூலமான பலன்களை அடைய முடியும். வரும் 22-04-2023 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க உள்ளதால் குரு மாற்றத்திற்குப் பிறகு பொருளாதார நிலையானது ஏற்ற இறக்கமாக இருக்கும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரவினை அடைவதில் தேவையற்ற சுணக்கங்கள் ஏற்படலாம்.
பொருளாதார ரீதியாக ஒரு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தவிர்ப்பது, எதிலும் கையிருப்பை கொண்டு செயல்படுவது நல்லது. அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுபச் செலவுகளை மேற்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள் மூலமாக எதிர்பாராத வீண் செலவுகளை எதிர்கொள்ள கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டால் தான் அடைய வேண்டிய பலனை அடைய முடியும். சில வெளிநபர்கள் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் சற்று குறையும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். நீங்கள் எதிலும் திறமையுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருந்தாலும் உங்களின் உடல் நிலையானது அன்றாட செயல்களுக்கு ஒத்துழைக்காது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொல்களை சொல்வார்கள்
வரும் ஆண்டில் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச் சனி நடைபெற இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். 2023-ஆம் ஆண்டில் கேது 4-லும் ராகு 10-லும் 30-10-2023 வரை சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
வண்டி வாகனங்கள் மூலமாக கூட எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிக்கனமாக இருந்தால் ஏற்படக்கூடிய சிறு சிறு இடர்பாடுகளை எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடையலாம்.
உடல் ஆரோக்கியம்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை திறன்பட செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். நெருங்கியவர்களிடம் ஏற்படக் கூடிய தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக ஒய்வு நேரம் குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் ஏப்ரலுக்குள் நல்லது நடக்கும். அசையும் அசையா சொத்துகளில் செய்யும் முதலீடு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், எதிர்பாராத வகையில் கடன் ஏற்படும் நிலை உண்டாகும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.
உத்தியோகம்
நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தாலும் உடல் ஆரோக்கிய குறைப்பாட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் மற்றவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்லது நடக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் மறைமுக எதிர்ப்புகளை எதிர் கொள்ள நேரிடும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும் என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் செயல்களில் கவனமுடன் செயல்படுவது கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் லாபகரமான பலனை அடைவீர்கள். வேலையாட்களால் நிம்மதி குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
எதிர்பார்த்த லாபத்தை ஆண்டின் தொடக்கத்தில் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக செயல்பட்டால் அடைய வேண்டி இலக்கை அடையலாம். தக்க சமயத்தில் தாராள தன வரவு உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும், நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதையும் தவிர்ப்பது நல்லது.
அரசியல்
உங்களது செல்வம், செல்வாக்கு உயரும் என்றாலும் எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படும். எந்தவொரு பணியிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைப்பது நல்லது.
கலைஞர்கள்
உங்களுக்கு அனுகூலப் பலன்கள் ஏற்படும் யோகம் ஆண்டின் தொடக்கத்தில் உண்டு. தொழில் போட்டிகளால் நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். நடிப்பு துறை மட்டுமின்றி பாடல் இசை துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான நிலை ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியை தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது.
பெண்கள்
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலமாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் மனச் சஞ்சலங்களும் வீண் செலவுகளும் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த புத்திர பாக்கியம் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் நிதானத்தோடு செல்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நன்று. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, 11-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கிருந்த நெருக்கடிகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறையும். பணவரவுகளில் சரளமான நிலை இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு, ஏழைகளுக்கு உதவி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 23-01-2023 பகல் 01.50 மணி முதல் 25-01-2023 பகல் 02.30 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு குரு 9-ல், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். தொழில் பொருளாதார நிலை லாபகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும் என்றாலும் தேவையற்ற பயணங்களினால் வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவை ஏற்பட்டு மனநிம்மதி குறையும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், சிறு சிறு மருத்துவ செலவுகளும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெறலாம். சிவ பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 20-02-2023 அதிகாலை 01.15 மணி முதல் 22-02-2023 அதிகாலை 01.10 மணி வரை.
மார்ச்.
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு முன்னேற்ற பலன்கள் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகர் வழிபாட்டையும், துர்கை வழிபாட்டையும் மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 19-03-2023 பகல் 11.17 மணி முதல் 21-03-2023 பகல் 11.57 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன், 10, 11-ல் புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புடன் கூடிய கௌரவ பதவிகள் கிடைக்கும். துர்க்கை வழிபாடு, சனி ப்ரீதி நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 15-04-2023 மாலை 06.44 மணி முதல் 17-04-2023 இரவு 08.52 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சனி 8-ல், குரு 10-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, சிக்கனமாக செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அரசு அதிகாரிகள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். துர்க்கையம்மன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 12-05-2023 இரவு 12.19 மணி முதல் 15-05-2023 அதிகாலை 03.24 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசியில் செவ்வாய், 8-ல் சனி, 10-ல் குரு சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். இம்மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். விநாயகர் வழிபாடும், துர்கையம்மன் வழிபாடும் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 09-06-2023 காலை 06.02 மணி முதல் 11-06-2023 காலை 08.46 மணி வரை.
ஜுலை.
ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 8-ல் சனி, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பதும், பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள், எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக ஒய்வு நேரம் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வது, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 06-07-2023 பகல் 01.38 மணி முதல் 08-07-2023 பகல் 02.57 மணி வரை.
ஆகஸ்ட்.
ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். முன்கோபத்தை குறைப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். குரு 10-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இம்மாதம் 18-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது நல்லது. சிவன், தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 02-08-2023 இரவு 11.25 மணி முதல் 04-08-2023 இரவு 11.17 மணி வரை மற்றும் 30-08-2023 காலை 10.18 மணி முதல் 01-09-2023 காலை 09.35 மணி வரை.
செப்டம்பர்.
ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். மகாலட்சுமி வழிபாடு, ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 26-09-2023 இரவு 08.28 மணி முதல் 28-09-2023 இரவு 08.28 மணி வரை.
அக்டோபர்.
மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு, சனி வக்ர கதியில் இருப்பதாலும் உங்களின் பொருளாதார நிலை சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் ஆதராயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். துர்கையம்மன் வழிபாடு, சனி கிழமை விரதம் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் – 24-10-2023 அதிகாலை 04.22 மணி முதல் 26-10-2023 அதிகாலை 05.57 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 4, 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். 3-ல் கேது, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறைந்து அனுகூலமான பலன்களை பெற முடியும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். முருக வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 20-11-2023 காலை 10.07 மணி முதல் 22-11-2023 பகல் 12.57 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபார ரீதியாக மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை திறமையுடன் சமாளித்து ஏற்றமான பலன்களை அடைவீர்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 17-12-2023 மாலை 03.45 மணி முதல் 19-12-2023 மாலை 06.20 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – வெள்ளை, சிவப்பு கிழமை – திங்கள், வியாழன்
கல் – முத்து திசை – வடகிழக்கு தெய்வம் – வெங்கடாசலபதி
சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

நவகிரங்களில் ராஜா என வர்ணிக்கப்படும் சூரியனின் ராசியில் பிறந்த சிம்ம ராசி நேயர்களே, இயற்கையிலே பிறரை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க கூடிய உங்களுக்கு வருகின்ற 2023-ஆம் ஆண்டில் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடையக்கூடிய ஆண்டாக இருக்கும் உங்கள் ராசிக்கு இவ்வாண்டில் சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 வரை அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலையும் சிறிதளவு நெருக்கடிகள் இருந்தாலும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார தேக்கங்கள் எல்லாம் விலகி தாராள தன வரவு ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடும்.
திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வருகின்ற நாட்களில் உங்களுக்கு உண்டு. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நல்ல முன்னேற்றங்களையும் நீங்கள் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் பார்க்கக் கூடிய நிலையும் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவதற்கான யோகங்கள் உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் இவ்வாண்டு முடிவுக்கு வந்து உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் யோகம் உண்டாகும். உங்களின் நீண்ட நாளைய திட்டங்களை ஏப்ரலுக்கு பிறகு செயல்படுத்தினால் அதில் முழுமையான வெற்றியினை அடைய முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
இவ்வாண்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 17-01-2023 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு முடிந்தவரை பேச்சில் பொறுமையோடு இருந்தால் வரும் ஆண்டில் நீங்கள் எல்லா வகையிலும் வளமான பலன்களை அடைய முடியும்.
உடல் ஆரோக்கியம்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மன கவலை உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகும். கடந்த கால கடன்கள் குறையும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்களால் தேவையற்ற நிம்மதி குறைவு உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதிகாரிகளின் அதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். சிறு சிறு ஆரோக்கிய பாதிப்பால் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதால் முடிந்த வரை சக ஊழியர்களை அனுசரித்து செல்வது, பெறுப்புகளை குறைத்து கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்
எடுக்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு ஏற்றம் பெறுவீர்கள். வேலையாட்களால் சில இடையூறுகள் நிலவினாலும் எதையும் சமாளித்து லாபங்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி ஏப்ரலுக்கு பிறகு பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நற்பலன் உண்டாகும். காண்டிராக்ட், கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் நல்ல லாபம் கிடைக்கும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள்.
அரசியல்
எதிர்பாராத கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். மக்களின் ஆதரவைப் பெற புது புது முயற்சிகளை கையாள்வீர்கள்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் அசதிகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று குறைந்து லாபகரமான பலனை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிட்டும். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். வேலையாட்களின் செயல்கள் உங்கள் மன அமைதியை குறைக்கும். பங்காளிகளிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். பணி புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன்பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.
மாதப் பலன்கள்
ஜனவரி.
ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது, ஏழைகளுக்கு உதவி செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 25-01-2023 பகல் 02.30 மணி முதல் 27-01-2023 மாலை 06.35 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 10-ல் செவ்வாய், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புடன் கூடிய பதவி உயர்வுகள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 22-02-2023 அதிகாலை 01.10 மணி முதல் 24-02-2023 அதிகாலை 03.43 மணி வரை.
மார்ச்.
ஜென்ம ராசிக்கு 7-ல் சனி, 8-ல் குரு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்கு பின் தான் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வு தாமதப்படும். சிவ வழிபாட்டையும், அஷ்டலட்சுமி வழிபாட்டையும் செய்யவும்.
சந்திராஷ்டமம் – 21-03-2023 பகல் 11.57 மணி முதல் 23-03-2023 பகல் 02.08 மணி வரை.
ஏப்ரல்.
ஜென்ம ராசிக்கு 9-ல் புதன், 11-ல் செவ்வாய், 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மாத முற்பாதியில் 8-ல் சூரியன் இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளை குறைப்பது நல்லது. சிவனையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 17-04-2023 இரவு 08.52 மணி முதல் 19-04-2023 இரவு 11.53 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, புதன், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். அஷ்டலட்சுமியை வழிபடுவது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 15-05-2023 அதிகாலை 03.24 மணி முதல் 17-05-2023 காலை 07.38 மணி வரை.
ஜுன்.
ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு, 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் ஏற்படும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். முருக வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 11-06-2023 காலை 08.46 மணி முதல் 13-06-2023 பகல் 01.32 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய பலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை நல்லபடியாக பெருக்க உதவும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். துர்கையம்மனையும், விஷ்ணுவையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 08-07-2023 பகல் 02.57 மணி முதல் 10-07-2023 மாலை 06.59 மணி வரை.
ஆகஸ்ட்.
ஜென்ம ராசியில் செவ்வாய், மாத முற்பாதியில் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற நெருக்கடி உண்டாகும். நீங்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது, கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. 3-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களின் உதவி உங்களுக்கு கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகப் பலனைப் பெற முடியும். தேவையின்றி தூர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிவனையும், முருகப் பெருமானையும் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 04-08-2023 இரவு 11.17 மணி முதல் 07-08-2023 அதிகாலை 01.43 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 1, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், வீண் அலைச்சல்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு சாதகமாக இருப்பதால் பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களது பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது மூலம் வீண் சிக்கல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பதன் மூலம் ஒருசில அனுகூலங்களை பெறமுடியும். சிவனையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 01-09-2023 காலை 09.35 மணி முதல் 03-09-2023 காலை 10.38 மணி வரை மற்றும் 28-09-2023 இரவு 08.28 மணி முதல் 30-09-2023 இரவு 09.10 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். விஷ்ணு வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 26-10-2023 அதிகாலை 05.57 மணி முதல் 28-10-2023 காலை 07.30 மணி வரை.
நவம்பர்.
ஜென்ம ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். சனி 7-ல் இருப்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை சமாளித்து முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு, துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 22-11-2023 பகல் 12.57 மணி முதல் 24-11-2023 மாலை 04.00 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் வீண் செலவுகளை குறைப்பது, எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வீண் பழிகளைச் சுமக்க நேரிடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சிவன், துர்க்கை வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம் -19-12-2023 மாலை 06.20 மணி முதல் 21-12-2023 இரவு 10.08 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – வெள்ளை, சிவப்பு கிழமை – ஞாயிறு, திங்கள்
கல் – மாணிக்கம் திசை – கிழக்கு தெய்வம் – சிவன்
கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

புதனின் ஆதிக்கத்தில் பிறந்து சூழலுக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2023 ஆம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும்.
சனி 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றல், பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், இருக்கும் இடத்தில் உங்களுடைய பெயர், புகழ், செல்வாக்கு மேலோங்க கூடிய யோகம் உண்டாகும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறையும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு தற்போது நல்லபடியாக நடந்து கொள்வார்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்கும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை எட்ட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவியை அடையும் யோகம், வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக அனுகூலமான பலனை அடையும் வாய்ப்பு உண்டாகும்.
ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 வரை சம சப்தமஸ்தானமான 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூட கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 22-04-2023-க்கு பிறகு குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். குரு 8-ல் சஞ்சரிக்க கூடிய காலத்தில் சனி 6-ல் சஞ்சரிக்கும் என்பதால் எதையும் சமாளித்து அனுகூலங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.
சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு, கேது இவ்வாண்டில் 30-10-2023 வரை கேது 2-லும், ராகு 8-லும் அதன் பிறகு கேது ஜென்மத்திலும் ராகு 7-லும் சஞ்சரிக்க இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது, இரவு பயணங்களை தவிர்ப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
குறிப்பாக 2023-ஆம் ஆண்டில் சனி பகவான் 6-ல் வலுவாக சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்க்கை தரமானது சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, உங்களின் நீண்ட நாளைய கனவுகளை வரும் நாட்களில் நிறைவேற்றக்கூடிய ஒரு யோகம் உண்டாகும். வீடு, மனை வாங்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற முடியும். நீண்ட நாட்களாக சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை சிறப்பாகி மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் ஏப்ரலுக்குள் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.
உத்தியோகம்.
கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முற்றிலும் மறைந்து செய்யும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுபடுத்தும் யோகம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகி உங்களுக்குள்ள சிக்கல்கள் எல்லாம் முழுமையாக குறையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அரசியல்
உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
கலைஞர்கள்
வரவேண்டிய பணவரவுகளில் இருந்த இழுபறி நிலை விலகி தக்க நேரத்தில் வந்து சேரும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து பெயர், புகழ் உயரும். வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல நிலை ஏற்பட்டு மன நிம்மதி ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி, மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பண விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் மன நிம்மதி உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். மண வயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். அழகிய குழந்தையை பெற்று எடுக்கும் யோகம் இவ்வாண்டில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள்.
மாணவ- மாணவியர்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்க கூடிய வாய்ப்பு உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்களால் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைய முடியும். சிவபெருமானையும் துர்க்கையம்மனையும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 31-12-2022 பகல் 11.45 மணி முதல் 02-01-2023 இரவு 08.50 மணி வரை மற்றும் 27-01-2023 மாலை 06.35 மணி முதல் 30-01-2023 அதிகாலை 02.45 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்புடன் முன்னேற்றமான பலன்களை அடையும் யோகம் உண்டு. துர்கையம்மன், முருகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 24-02-2023 அதிகாலை 03.43 மணி முதல் 26-02-2023 காலை 10.15 மணி வரை.
மார்ச்.
ஜென்ம ராசிக்கு மாத முற்பாதியில் 6-ல் சூரியன், பிற்பாதியில் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயர்வது மட்டுமின்றி எதிலும் முன்னேற்றங்களும் உயர்வுகளும் உண்டாகும். கடன்கள் பைசலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். சர்பேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 23-03-2023 பகல் 02.08 மணி முதல் 25-03-2023 இரவு 07.25 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் – 19-04-2023 இரவு 11.53 மணி முதல் 22-04-2023 அதிகாலை 05.00 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு. தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஓற்றுமையுடன் செயல்படுவார்கள். சூரியன், குரு, ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஓற்றுமை நிலவும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. சிவன், விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 17-05-2023 காலை 07.38 மணி முதல் 19-05-2023 பகல் 01.35 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த காலப் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 13-06-2023 பகல் 01.32 மணி முதல் 15-06-2023 இரவு 08.23 மணி வரை.
ஜுலை.
மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், சனி 6-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் விருத்திக்காக எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு, ராகு 8-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அசையும், அசையா சொத்துக்களால் ஒரு சில விரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் சில நேரங்களில் உங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 10-07-2023 மாலை 06.59 மணி முதல் 13-07-2023 அதிகாலை 01.58 மணி வரை.
ஆகஸ்ட்.
சனி 6-ல், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதன் மூலம் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும் 8-ல் குரு, 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து உங்கள் வாழ்க்கை தரம் உயரும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். கேது 2-ல், ராகு 8-ல் இருப்பதால் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல்களில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்தும் போது கவனமாக கையாள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். துர்க்கையம்மனையும், முருகரையும் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 07-08-2023 அதிகாலை 01.43 மணி முதல் 09-08-2023 காலை 07.42 மணி வரை.
செப்டம்பர்.
ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். பணவரவுகள் ஒரளவுக்குச் சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க இடையூறு ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது சிறப்பு, சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 03-09-2023 காலை 10.38 மணி முதல் 05-09-2023 மாலை 03.00 மணி வரை மற்றும் 30-09-2023 இரவு 09.10 மணி முதல் 02-10-2023 இரவு 12.15 மணி வரை.
அக்டோபர்.
ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது சிறப்பு. வேலையாட்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதுடன் சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். சிவ வழிபாடும், குருவுக்கு தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 28-10-2023 காலை 07.30 மணி முதல் 30-10-2023 காலை 10.28 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் சூரியன், செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார நிலையில் உயர்வான நிலைகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். கடன்கள் அனைத்தும் குறையும். துர்க்கை, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 24-11-2023 மாலை 04.00 மணி முதல் 26-11-2023 இரவு 07.55 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், உத்தியோக ரீதியாகவும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தட்சிணாமூர்த்தி வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 21-12-2023 இரவு 10.08 மணி முதல் 24-12-2023 அதிகாலை 03.17 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,7,8 நிறம் – பச்சை, நீலம் கிழமை – புதன், சனி
கல் – மரகத பச்சை திசை – வடக்கு தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

