
துபாய் சார்ஜா நகரில் ஆறு வயது சிறுமி, விளையட்டாக, செல்போனை எடுத்து, ஏதோ சில நம்பர்களை அழுத்திவிட்டு காதில் வைத்திருக்கிறாள். அச்சிறுமி அழுத்தியது போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு சென்றுவிட அவர்கள் போனை எடுத்து யார் என்று கேட்டுள்ளனர்.
குழந்தை யோ, நான் தான் சுமையா என்று மழலைக் குரலில் கூறியுள்ளது. நிலைமயை புரிந்து கொண்ட அவர்கள், குழந்தையிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, சுமையா நிறைய கிஃப்ட் வேண்டும் அங்கிள் எனக் கூறியுள்ளார்.
செல்போன் நம்பரை வைத்து, குழந்தையின் முகவரி தேடிச் சென்று போலீசார் கதவைத் தட்ட, கதவைத் திறந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். வீட்டு வாசலில் போலீஸார் நிற்க, காரணம் தெரியாமல் குழம்பினர்.
அதுவும் கையில் நிறைய கிஃப்ட் இருப்பதையும் பார்த்துத் திருதிருவென முழிக்க, காவல் துறையினரோ நாங்கள் சுமையாவப் பார்த்து, இந்தப் பரிசுப் பொருட்களைக் கொடுக்க வந்தோம் என்று கூற அனைவரும் ஆச்சரியத்திலும், ஆனந்ததிலும் திக்கிமுக்காடிப் போனார்கள். சுமையா என்று அழைத்துக் குழந்தையிடம் பரிசுப் ப்ருட்களை கொடுத்ததும் சுமையாவுக்கு முகமெல்லாம் சிரிப்பு. இச்சம்பவம் அனைவரியும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியும் காவல் அதிகாரிகள்.


