Selfie: புகைப்படம் எடுத்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஊட்டியில் யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம்(Selfie) எடுத்துக்கொண்ட ஹில் காப் காவலர் கணேசன் ஆயுதப்படைக்கு  மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த அண்ணாமலை, கூடலூர் நகரில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர், கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார்.

அன்றைய தினம் மாலை ஊட்டிக்கு வருகை தந்த அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஊர்வலத்தின்போது நீலகிரியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஹில் காப்’ காவலர் கணேசன்சீருடையோடு அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹில் காப்’ காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றிக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *