
நியூஸ் கிளிக்’ இணைய ஊடக செய்தி நிறுவனத்திற்கு சீல்!
புதுடெல்லி: சீனாவுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிட்டுப் பணமோசடி புகாரில் சிக்கிய இணைய ஊடக நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறையினர் சீல் வைத்தது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
டெல்லி – என்சிஆர் பகுதியில் ‘நியூஸ் கிளிக்’ என்ற இணைய ஊடக செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்தச் செய்தி நிறுவனமானது சீனாவுக்கு ஆதரவான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் பணப்பரிமாற்ற விவகாரங்களை அமலாக்கத்துறை கண்காணித்து வந்தது. அதில் சீன நிறுவனங்களிடமிருந்து சட்டவிரோதமான முறையில் மேற்கண்ட நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களுக்குப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.
அதையடுத்து டெல்லி-என்சிஆர் பகுதியில் வசிக்கும் இணைய செய்தி நிறுவன அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்களின் வீடுகளில் இன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுச் சோதனை நடத்தி வருகிறது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதற்காகப் பணமோசடியில் ஈடுபட்ட ‘நியூஸ் கிளிக்’ இணைய ஊடகத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இணைய ஊடகத்திற்கு தொடர்புடைய இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுச் சோதனை நடத்தியது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்.
இந்த நிலையில்டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் செய்தி இணையதள அலுவலகத்துக்கு டெல்லி போலீஸ் சீல் வைத்தது. காலை முதல் நியூஸ் கிளிக் இணையதளம் தொடர்புடைய இடங்களில் போலீஸ் சோதனை நடத்தியதை அடுத்துஅலுவலகத்துக்கு டெல்லி போலீஸ் சீல் வைத்தது.
இந்தச் சம்பவத்துக்கு இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாகக் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில்: இணையதள செய்தி நிறுவனமான நியூஸ்கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் நடத்தி வரும் சோதனை கண்டனத்துக்குரியது எனவும் டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை ஊடகத்துறைக்குக் கடிவாளம் போடும் செயல் எனவும் இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



