Stree 2:உலக அளவில் ரூ.560 கோடி வசூல் !

Advertisements

‘ஸ்ட்ரீ 2’ படம் உலக அளவில் ரூ.560 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மும்பை:ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ஸ்ட்ரீ’. ஹாரர் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு நடிகை தமன்னா நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியான முதல் நாளே ரூ. 51.8 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது.

ரூ.50 கோடி பட்ஜெட் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், தற்போது உலக அளவில் ரூ.560 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில் வெளியான அக்சய் குமாரின் ‘கேல் கேல் மெய்ன்’ மற்றும் ஜான் ஆபிரகாமின் ‘வேடா’ படங்களுடன் மோதி ‘ஸ்ட்ரீ 2’ படம் இந்த வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *