The Tamil Wikipedia: விக்கிப்பீடியா உதயமான நாள்!

செப்டம்பர்’ 30 இன்று தமிழ் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்ட  நாள்.

அனைத்து  தகவல்களும் மொழிகளைக்  கடந்து  எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதே விக்கிப்பிடியாவின்   உயரிய  நோக்கமாகும்.இணையதளத்தில் எல்லா தகவல்களையும் மிக நேர்த்தியான தொகுப்போடு யாரும் பெறக்கூடிய வகையில் விக்கிப்பீடியா வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது லாப நோக்கமற்ற நடுநிலைமையை வலியுறுத்தும்  சிறந்த இணைய தளம்.கட்டற்ற விக்கிப்பீடியா தகவல், கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு செப்டம்பர்’ 30 2003-ல் தொடங்கப்பட்டது.இந்தக் களஞ்சியத்தில் எவரும் எழுதலாம் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும். தகவல்களைச் சரி பார்க்கும் வண்ணம் ஆதாரங்கள்  தந்து நடுநிலைமையுடன் எழுத வேண்டும் என்பது இதன் கொள்கை.

இதில் இடம் பெறும் கட்டுரைகள் யாவும் வாசகர்களால் பதிப்புரிமை இல்லாது பதிவேற்றம் செய்யப்படுகிறது. விக்கிப்பீடியாவின் பதிவில் உள்ள பக்கங்களையும் யாரும் தங்களது தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விக்கிப்பீடியா நமது உற்ற நண்பன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *