ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா..!

ரஷ்ய கொடியுடன் சென்ற கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்ததையடுத்து, ரஷ்யா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

வட அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தக் கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இந்தக் கப்பலில், ரஷ்ய தேசிய கொடி பொருத்தப்பட்டிருந்ததாகவும், கப்பல் ரஷ்யாவுக்குச் சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதுகுறித்து ரஷ்யப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1982 ஆம் ஆண்டு ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தப்படி, சா்வதேச கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு சுதந்திரம் உள்ளது.

எனவே மற்ற நாட்டில் சட்டபூா்வமாகப் பதிவு பெற்ற கப்பல்கள் மீது பறிமுதல் செய்ய உரிமை இல்லை. மேலும், தங்கள் நாட்டு கொடி பறக்கவிடப்பட்ட எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *