சக்தி காந்ததாஸ் மருத்துவமனையில் அனுமதி !

Advertisements

சென்னை:

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ்; 67 வயதாகும் இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். ஆனால், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதம் தாசின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், சக்திகாந்த தாஸ் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *