காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஹெவிவெயிட் ‘பாரா பவர்லிஃப்டிங்’ பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஜண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜண்டு குமார், ஆடவர் ஹெவிவெயிட் ‘பாரா பவர்லிஃப்டிங்’ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் 181 கிலோ மற்றும் 190 கிலோ எடைகளை வெற்றிகரமாகத் தூக்கி 130.9 புள்ளிகளைப் பெற்றார். இதன்மூலம் அவர், நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.


