ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுப் போட்டியில் எகிப்தின் மயார் ஷெரிப் வெற்றி பெற்றுள்ளார்.
ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், ஸ்பெயினின் பவுலா படோசா, எகிப்தின் மயார் ஷெரிப் உடன் மோதினார்.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய மயார் ஷெரிப் 7-4, 6-4 என்ற செட் கணக்கில் பவுலா படோசாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், மயார் ஷெரிப் அரையிறுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.


