
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதவி விலக வேண்டும் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நீட் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். தான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் துணையாக நிற்பதாகத் தெரிவித்துள்ளார். பொறுப்புணர்வுடன் இருந்து ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்பதாகக் கூறியுள்ளார்.
போராட்டத்தில் சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் ஆகியோரை போல தங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தடையின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென் Z தலைமுறையினரை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறினார்.



