Kancheepuram : மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பேச்சு..!

காஞ்சிபுரத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஜேப்பியாா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இதுதொடர்பாக, கட்சியின் பொதுச் செயலா் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தவெக தலைவா் விஜய் உறுதியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சி முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். எனவே, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் போ் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.

இதற்கு கட்சி தொண்டா்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *