30 ஆண்டுகளில் இல்லாத ஊழல் ஆட்சி..!

தி.மு.க ஆட்சியில் 30 ஆண்டுகளில் இல்லாத ஊழல் பெருகி ஊழல் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாஞ்சில் சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பொது கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் கலந்து கொண்டு பேசியபோது, தி.மு.க ஆட்சியில் 30 ஆண்டுகளில் இல்லாத ஊழல் பெருகி ஊழல் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

திமுக அரசாங்கம் போடும் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் 25 சதவீதம் கமிஷன் மூலம் நடைபெறுகிறது என்றும் தற்போதைய சட்ட ஒழுங்கு மோசமாகவும் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நிரந்தர டிஜிபி கூட   போட முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார். திருச்செங்கோட்டில் ஆறு மாதமாக சாக்கடை அடைபட்டு கழிவுநீர் தேங்கி இருக்கும் நிலையில் திருச்செங்கோடு தரம் உயர்த்தப்பட்ட நகராட்சியாக இருப்பதாக திமுக பெருமையாக  கூறுவது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார்.

திருச்செங்கோட்டில் கண்டிப்பாக வருகின்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு மாற்றம் வரும் மக்களுக்கு நல்லாட்சியை தமிழக வெற்றி கழகம் தரும் என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *