தனுஷ் – மம்முட்டி கூட்டணியில் ‘ஓம்’ – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய டீசர்!

பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படம்  அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் தனுஷ் ஓம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், இதில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

ஓம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் தனுஷின் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர்  வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *