
தூத்துக்குடியில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது, முன்னாள் கடம்பூர் ராஜீ பேசியபோது,மழைக்காலத்தில் தோன்றி மறையும் வானவில் போல தமிழக வெற்றிக் கழகமும் மறையும் என்றார்.
மெர்சல் பட பிரச்சனைக்கு இரவோடு இரவாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்பட்டது என்றும் வாழ்நாள் முழுக்க நன்றி கடனாக இருப்பேன் என்று கூறியவர் அதிமுக பெயரை சொல்லவே பயப்படுகிறார் என்றும் தெரிவித்தார். தம்பி விஜய்க்கு அரசியல் வேண்டாம் என்றும் மீண்டும் நடிக்க வந்தால் உங்கள் படத்திற்கு எவ்வித பிரச்சனை இல்லாமால் பார்த்துக் கொள்ளப்படும் எனக் கூறினார். இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,பெருமாள், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


