உலகமே போற்றும் இந்தியாவின் இளைஞர் சக்தி – பிரதமர் மோடி பெருமிதம்.!

Advertisements

இந்தியாவின் இளைஞர் சக்தி குறித்து உலகம் பேசுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 15 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் முதல் தவணையாக இரண்டாயிரத்து 400 கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார்.

இதன் பின்னர், அவர் நிகழ்ச்சியில் பேசியபோது, ஜி7 மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்தாகவும் இந்தியாவின் இளைஞர் சக்தி குறித்து உலகம் பேசுகிறது என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு இந்திய இளைஞரும் தனது ஆற்றலையும் வாய்ப்புகளாக மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உலகளவில் ‘மேக் இன் இந்தியா’ பிராண்டுகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன, எனவே, இந்த வாய்ப்புகளை நாம் தவறவிடக்கூடாது என்று கூறினார்.

இந்தியா எதிர்காலப் பொருளாதாரத்திற்குத் தலைமை தாங்கத் தயாராகி வருகிறது என்றும் இந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *