
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதன் உச்சமாக பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த முஸ்லிம் தலைவர் தலைமையிலான கும்பல், இந்து பெண்ணை வீடு புகுந்து கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் பதவியேற்றதில் இருந்தே இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் மத வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்துவரும் நிலையில், இந்து மத பெண் ஒருவர், உள்ளூர் அரசியல் பிரமுகரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது.
இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அங்கு இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் மத வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன.
வங்கதேசத்தில் இந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக உள்ளூர் அரசியல் பிரமுகர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்துக்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன. பெண்களும் பாலியல் சீண்டல்களை அனுபவித்தனர்.இந்த நிலையில் வங்க தேசத்தின் முராத் நகர் பகுதியில் அமைந்துள்ள தனது தந்தை வீட்டுக்கு 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றார். இந்தப் பெண்ணின் கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கோயில் திருவிழாவுக்காக அந்த பெண் தனது தந்தை வீட்டுக்கு சென்றார்.
அப்போது வங்க தேச தேசிய கட்சியின் உள்ளூர் பிரமுகர் ஃபசோர் அலி அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். இரவு 10 மணி அளவில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் ஃபசோர் அலி அத்து மீறி நுழைந்ததாக தெரிகிறது. அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லை. தந்தை வெளியில் சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஃபசோர் அலி, அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடிவரவும் பசோர் அலி தப்பி ஓட முயன்று இருக்கிறார். அவரை மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். எனினும் அங்கிருந்து தப்பி ஓடிய பசோர் அலியை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பல்வேறு பிரச்சினைகளில் கையை பிசைந்து கொண்டு இருக்கும் முகம்மது யூனுஸ்க்கு தற்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதை அடுத்து அந்த பெண் தனக்கு நேர்ந்த அவல நிலை குறித்து உள்ளூர் போலீசில் புகார் அளித்தார்.இதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஃபசோர் அலி உட்பட அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர். இதற்கு இடையே இந்த சம்பவம் வங்க தேசத்தில் பூதாகரமாக வெடித்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக டாக்கா பல்கலைக்கழக இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டுமென மாணவர்கள் முழக்கமிட்டனர்.இதை அடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து ஃபசோர் அலி உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.


