
புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்குச் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலக வாசலிலேயே நடைபெற்ற தாக்குதல், சட்டம் ஒழுங்குச் சீரழிவிற்கான சான்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலைத் தடுக்காமல் அங்குள்ள காவலர்கள் வேடிக்கை பார்த்தது கொடுமையின் உச்சம் என்றும் தெரிவித்துள்ளார். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் துணிவற்ற கோழைகளாலேயே இக்கொடுந் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்கள் பணியாற்றும் அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பில்லாத கொடுஞ்சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.



