Mumbai : பத்துநாட்களாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம் நிறைவு!

Advertisements

மும்பையில் விநாயகர் சதுர்த்தி நாளில் இருந்து பத்து நாட்களாகப் பூசை செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கடலில் கரைத்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவப்பட்ட பிள்ளையார் சிலைகளுக்குப் பத்து நாட்களாகப் பூசைகள் நடைபெற்று வந்தன.

அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் விநாயகரை வழிபட்டுச் சென்றனர். இதையடுத்து நேற்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.

கிர்கான் சௌபட்டியில் அரபிக் கடலில் சிலைகளைக் கரைக்கக் கொண்டுசென்றபோது முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே ஆகியோர் மலர்களைத் தூவி வணங்கினர்.

மும்பை லால்பாக்சா ராஜா பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் ஆனந்த் அம்பானி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புனேயில் பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் சென்றபோது நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கைகளும் வண்ண விளக்கொளிக் காட்சிகளும், சிறாரின் தற்காப்புக் கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *