
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன். ரசிகர்களால் சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
இதையொட்டி, நடிகர் சிம்புக்கு திரைத்துறையினர், ரிசகர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிம்பு பிறந்தநாளை ஒட்டி, சிம்பு நடிக்கும் 49-வது படம்குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வரிசையில், தக் லைஃப் படக்குழு சார்பில் நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாகத் தக் லைஃப் படத்தைத் தயாரித்துள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் அமர்ந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வீடியோ முடிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ்.டி.ஆர். என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சிம்பு பிறந்த நாளை ஒட்டி அவரது படம்குறித்த வீடியோ வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
