
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, வீ த லீடர்ஸ் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி அந்த கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிக்கவுள்ளார்.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, வீ த லீடர்ஸ் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். பொள்ளாச்சி மாநாட்டைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் 2-வது மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அடுத்த மாதம் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்த, தமிழகம் முழுவதும் வீ த லீடர்ஸ் தொண்டர்களைச் சந்திக்கும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.




