கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் – சிஜெபி அறிவிப்பு!

Advertisements

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை அமைதிப் போராட்டம் தொடரும் எனக் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டத்தைக் கைவிடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நீட் முறைகேடு தொடர்பாக விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தித் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து  இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித்துறைச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். சோனம் வாங்சுக் போராட்டத்தை முடித்ததை பிரதமர் மோடி வரவேற்று, மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி விரைந்து உடல்நலம் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சோனம் வாங்சுக்கின் தியாகத்தைப் பாராட்டிய கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை அமைதிப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *