பெண்கள் லட்சாதிபதியாக வேண்டும் என்பதே பிரதமரின் கனவு……!

ஒவ்வொரு பெண்ணும் ஒரு ‘லட்சாதிபதியாக’ திகழ வேண்டும் என்ற கனவைப் பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்குக் காட்டியுள்ளார் என்று மகாராஷ்டிர அமைச்சர் யோகேஷ் ராம் தாஸ் கதம்  தெரிவித்துள்ளார்.

மும்பையில் 2026ஆம் ஆண்டுக்கான  ‘மஹாலட்சுமி சரஸ் விற்பனை மற்றும் கண்காட்சி ‘ நிகழ்வு குறித்து மகாராஷ்டிர அமைச்சர் யோகேஷ் ராம் தாஸ் கதம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது  ஒவ்வொரு பெண்ணும் ஒரு ‘லட்சாதிபதியாக’ திகழ வேண்டும் என்ற கனவை பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்குக் காட்டியுள்ளார் என்றார். அந்தக் கனவை நனவாக்குவதில் இன்றைய இந்த மைல்கல் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில், குறைந்தது 40 கோடி ரூபாய் அளவிற்கான வர்த்தகத்தை எட்ட வேண்டும் என்பதே தங்களின் இலக்காகும் என்று கூறினார். மேலும் மகாராஷ்டிரப் பெண்கள் அதிகாரம் பெற்று வருகின்றனர்.

அவர்கள் உருவாக்கும் பொருட்கள் அனைத்தும் தரமானவையாக உள்ளன,” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *