சீமான் போன்றோரின் அறிவுரைப்படி ஆட்சி நடத்த வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை – சேகர்பாபு பேச்சு

சீமான் போன்றோரின் அறிவுரைப்படி ஆட்சி நடத்த வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு,  அன்பரசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடு சொல்லக்கூடாது என்பதற்காக உணவு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

19 திருக்கோவில்களில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்குப் பெருந்திட்ட வரைவு நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *