
பாசனத்துக்குப் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடுவார் என்று தமிழக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, பாசன நீருக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிடாவிட்டால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தை அணுகுவார் என்று தெரிவித்தார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிதான் மீண்டும் வெற்றி பெறும் என்றும் நேரு நம்பிக்கை தெரிவித்தார்.


