Kumapatti : ஏங்ங்க.. ஊரையே ஏமாத்திய கூமாபட்டியன்! இது உலக மகா ஸ்கேமுடா சாமி!

Advertisements

எங்கு பார்த்தாலும் கூமாபட்டி தான்.. ‘ஏங்க கூமாபட்டிக்கு வாங்க’ என இளைஞர் ஒருவர் வீடியோ போட பலரும் அந்த ஊர் எங்க இருக்கிறது என தேடத் தொடங்கினர். உண்மையில் கூமாபட்டியில் நீர் நிலைகள் எதுவுமே கிடையாது. இருப்பது வறண்டு தான் உள்ளது. அந்த ஊரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிளவக்கால் அணையை வைத்து தான் அந்த இளைஞர் வீடியோ போட்டு இருக்கிறார். இதை அடுத்து பலரும் அங்கு படை எடுத்த நிலையில், ஒன்றுமே இல்லாததால் வெறுப்பில் சமூக வலைதளங்களில் அந்த இளைஞருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திடீர் திடீரென சமூக வலை தளங்களில் ஏதாவது ஒரு விவகாரம் ட்ரெண்டாவது வழக்கம். வணக்கம் டா மாப்ள தேடி தொடங்கி PRAY FOR நேசமணி வரை எக்கச்சக்க விஷயங்கள் எதற்கு ட்ரெண்ட் ஆகிறது என்றே தெரியாமல் ட்ரெண்டாகும். அப்படி ஒரு விஷயம் தான் கூமாப்பட்டி.

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என இளைஞர் ஒருவர் போட்ட ரீல்ஸ் அதிக அளவில் ட்ரெண்ட் ஆனது. ஏங்க எங்க ஊரு கூமாபட்டி சொர்க்கபூ மிங்க.. தண்ணிய பாருங்க.. சர்பத் மாதிரி இருக்கும்.. 7அப் மாதிரி இருக்கும்! தனி ஐலாண்டு கூமாபட்டி..

கல்யாணம் ஆகலையா கூமாபட்டிக்கு வாங்க.. கவலையா இருக்கா கூமாப்பட்டிக்கு வாங்க.. லவ் ஃபெயிலியரா கூமாபட்டிக்கு வாங்க..! என விதவிதமாக வசனத்தோடு அவர் போட்ட வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டது. இதை அடுத்து கூகுள் மேப் தொடங்கி பல சமூக வலைதளங்களில் கூமாபட்டி ட்ரெண்டானது. பலரும் ஆர்வத்தோடு அந்த ஊரை பற்றி விசாரிக்க தொடங்க. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கும் ஒரு சின்ன கிராமம் தான் கூமாப்பட்டி.

கோவிலாறு அணை, பிளவக்கல் பெரியாறு அணை ஆகிய அணைகளுக்கு முன்னதாக இந்த இருக்கிறது உண்மையில் இந்த ஊருக்கும் பிளவுக்கள் அனைத்தும் சம்பந்தமே இல்லை. கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் இடைவெளியில் தான் பிளவக்கல் அணையும் கூமாபட்டியும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிளவக்கல் அணைக்குச் சென்ற அந்த இளைஞர் அதனை வீடியோ எடுத்து கூமாப்பட்டிக்கு வாங்க என வீடியோ போட்டுள்ளார்.

தற்போது அதுதான் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இளைஞர் ரீல்ஸ் வீடியோவை நம்பி பலரும் அந்த பகுதிக்கு படையெடுத்து சென்றனர். வீடியோவில் போட்டது போல கூமாபட்டியை சுற்றி எந்த நீர் நிலையிலும் இல்லை. இருந்த ஒரு குளமும் வாய்க்காலும் வறண்டு போயிருக்கிறது. பிளவக்கல் பெரியார் அணையை முறையாக பராமரிக்காததன் காரணமாகவே அந்த ஊருக்கு தண்ணீர் வரத்து இல்லை என சொல்லப்படுகிறது.

இதை அடுத்து பிளவக்கல் அணைக்காவது செல்வோம் என பலரும் அங்கு சென்று நிலையில் அங்கு குளிக்க அனுமதி இல்லை என பொதுப்பணித்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அந்த இளைஞரின் வீடியோவை நம்பி சென்ற பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பியுள்ளார். இதனையடுத்து ஏமாந்த பலரும், தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர். 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மோசடி இந்த கூமாபட்டி மோசடி என சமூக வலைதளங்களை கண்டனம் எழுந்திருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *