நாங்கள் அரசின் பக்கம் இல்லை : சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி.!

அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவோ அல்லது ஆட்சியை வீழ்த்தும் எண்ணமோ தங்களுக்கு இல்லை என்றும், என்றும் உழைக்கும் வர்க்கத்தின் குரலாகவே செயல்படுவோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலைப் பாட்டை மிகவும் தெளிவான சொற்களில் விளக்கியுள்ளார்.

 “ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற சிந்தனையோ, அரசைக் குறிவைத்து கல் எறியும் எண்ணமோ எங்களுக்கு எப்போதும் இல்லை. அரசை முடக்கும் வகையில் நிர்பந்தம் தரும் அரசியல் நாங்களும் செய்வதில்லை” என்று வீரபாண்டியன் தெரிவித்தார்.

தொடர்ந்த அவர், “அரசுக்கு எங்கள் ஆதரவு தேவைப்பட்டாலும் சரி, தேவைப்படாவிட்டாலும் சரி… நாங்கள் என்றென்றும் அரசின் பக்கம் நிற்கப்போவதில்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் பக்கமே உறுதியாக நிற்போம்” என அதிரடியாகத் தெரிவித்தார்.

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டவும், எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடவும் சிபிஐ ஒருபோதும் தயங்காது என்பதை இந்த பேட்டி மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் ரீதியாக பல்வேறு கூட்டணிக் கணக்குகள் பேசப்பட்டு வரும் சூழலில், சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியனின் இந்தத் தெளிவான மற்றும் உறுதியான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *