ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு ஏன் கிடப்பில் போனது – போலீஸ் விசாரணையில் பரபரப்பு?

ஒரு பென்டிரைவ். அதில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள். அதன் பின்னர் நடந்த விசாரணை. திடீரென அமைதியான போலீஸ் நடவடிக்கை. மாதக்கணக்குக்குப் பிறகு மீண்டும் தூசு தட்டப்பட்டது. அந்த வழக்கில் பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவுக்கு அக்டோபர் 6 2025 அன்று வந்த தன்னார்வலர் ஒருவர், சென்னையின் பிரபல தொழிலதிபர் ஒருவர் சிறுமியுடன் தனிமையில் இருக்கும் காட்சிகள் அடங்கிய பென்டிரைவ் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதை ஆய்வுசெய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், வீடியோவில் இருப்பவர் பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்பதை அடையாளம் கண்டு, அப்போதைய காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

அதன் பிறகு தொழிலதிபர் வீரமணி மீதான புகார் விபசார தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அக்டோபர் 7.2025 அன்று போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்த விபசார தடுப்புப் பிரிவு போலீஸார், தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி, அவருடைய கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரைச் சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

தொழிலதிபர் வீரமணிக்கு 84 வயதாகிறது. வழக்கறிஞரான இவர், கிரானைட் தொழிலில் இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறந்தவர். ஜெம் குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார். அவரிடம் நீண்டகாலமாக வேலை பார்ப்பவர்கள் மகேந்திர சிம்கனும், சாந்தியும். அந்தத் தம்பதிக்கு தேனாம்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டுக்குத்தான் சிறுமிகளை வரவழைத்து வீரமணிக்கு விருந்தாக்கியிருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் பென்டிரைவ் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு, அது போலீசுக்கு வந்தது. அதைத்தான் ஆதாரமாகக்கொண்டு, தேனாம்பேட்டையில் இருக்கும் சாந்தி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, மேலும் சில முக்கிய ஆதாரங்கள் சிக்கின. அவற்றை அப்போதைய போலீஸ் உயரதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால், இந்த விஷயத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தாமல் அதிகாரிகள் மொத்த வழக்கையும் கிடப்பில் போட்டுவிட்டனர்.

இந்தச் சூழலில்தான் போக்சோ வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பியது. அதன் பிறகு, இந்த வழக்கை மீண்டும் விசாரித்து பாலியல் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் விபசார தடுப்புப் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரின் மேற்பார்வையில் இயங்குகிறது. துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் இதில் பணியாற்றுகின்றனர். இந்தப் பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்டார். அவருடன் நீண்ட காலமாகப் பணியாற்றிய மற்றொரு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், தற்போது குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

வீரமணியின் சேட்டைகள் தொடர்பான பதிவுகள் அடங்கிய பென்டிரைவ் கிடைத்ததும், அவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், அப்போதைய போலீஸ் அதிகாரியிடம் வீரமணிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அன்புப் பரிசுகள் உடனடியாக கைமாறியுள்ளன. இதையடுத்து, வழக்கு மேல் விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களும் சாந்தியின் வீட்டிலிருந்து சில சிறுமிகளை ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று இரையாக்கியிருக்கின்றனர்.

இதில் விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் நேரடியாகவே தொடர்பு இருக்கிறது. இந்த இன்ஸ்பெக்டர் தி.மு.க தலைமைக்கு மிகவும் வேண்டப்பட்ட ஷ் பிரமுகர் ஒருவரின் குட்புக்’கில் இருப்பவர். அதனால் ஷ் பிரமுகரிடமும் சில சிறுமிகளை, இன்ஸ்பெக்டரே அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கு ஏன் கிடப்பில் போடப்பட்டது என்பது குறித்த விசாரணை தொடங்கியிருக்கிறது..

இந்த விவகாரம் சென்னை கமிஷனர் அமல்ராஜ் இந்த வழக்கில் கிடைத்த முக்கியமான ஆதாரங்களில் ஒன்று பென்டிரைவ். இது தவிர, மேலும் சில முக்கிய ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் வீரமணி உட்பட மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். குறிப்பிட்ட சிறுமி தவிர, மேலும் பல சிறுமிகள் செக்ஸ் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் உடனே கைதுசெய்யவில்லையே ஏ’ என்று கேட்டால், எல்லாவற்றுக்கும் காரணங்கள் உள்ளன. ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்கிறார்..

முதலில் இந்த பென்டிரைவ் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் அளித்த ரகசிய புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. புகார்தாரர் அளித்த பென்டிரைவை ஆய்வு செய்தபோது, அதில் வயதான நபர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறை போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும், காவல்துறையின் விரிவான விசாரணையில், வீடியோவில் இருந்த நபர் பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவரும் 84 வயதான வீரமணி  என்பது தெரியவந்தது.

இவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த வீட்டிற்கு சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதோடு, பல தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் சிறுமிகளை அனுப்பியிருப்பது அம்பலமானது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காவல்துறை சோதனை நடத்தி, வழக்குடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றினர். இந்த குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய ஜெம் குழுமத் தலைவர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், வீராமணி மற்றும் அவரது கூட்டாளிகளாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலும் பல பாதிக்கப்பட்ட சிறுமிகள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொழிலதிபர் வீராமணியால் குறைந்தபட்சம் 9 சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை புலனாய்வாளர்கள் திரட்டியுள்ளனர். நம்பகமான தகவல்களின் அடிப்படையில் காவல்துறை சில சிறுமிகளைக் கண்டறிந்து விசாரணை நடத்தியபோது, கடந்த காலங்களில் தாங்கள் சிறுமிகளாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் இதன் மூலம் சுரண்டப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக காவல்துறை தெளிவுப்படுத்துகிறது.

இந்த வழக்கு தொடர்பாக  காவல்துறை அதிகாரி, பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான ரகசியம் காக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளோம். வீடியோவில் காணப்படும் சிறுமி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், நடைமுறையில் உள்ள நலத்திட்டத்தின் கீழ் அவருக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சாந்தி என்பவரிடமிருந்து வீரமணிக்கு அனுப்பப்பட்ட தகவல்களில், 2003-ம் ஆண்டு ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து நினைவிருக்கிறதா. என்று கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்தும் தீவிர விசாரணை நடத்தி கூடுதல் தகவல்களைத் திரட்டி வருகிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ், மூத்த அதிகாரிகளுடன் இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி, விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு தனிப்படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, வீரமணியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரது வயதைக் கருத்தில் கொண்டு, புழல் மத்திய சிறை வளாகத்திலேயே வைத்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இன்னும் இதில் சம்பந்தப்பட்ட மற்ற தொழிலதிபர்களும், பிரமுகர்களும் எப்போது கைது செய்யப்படுவார்கள் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக சாந்தி குறித்து கேள்வி கேட்டபோது வீரமணியின் முகம் மாறியது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க பணம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தனர் போலீஸ். அதற்கு அவர், நான் தவறே செய்யவில்லை. அப்படியிருக்கும் போது எப்படி பணம் கொடுப்பேன் என்று பதிலளித்தார்.

இதையடுத்து வீரமணி அளித்த பதில்களை ரிப்போர்ட்டாக நீதிமன்றத்தில் சமர்பிக்கும் வேலை நடந்து வருகிறது. இந்த வழக்கில் போலீசுக்கு கிடைத்த ஆதாரங்கள், தகவல்களின்படி வீரமணியைக் கைது செய்யாமலிருக்க பணம் பேரம் பேசப்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக விசாரிக்க ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டிருக்கிறது’.

வீரமணியின் பின்னணி குறித்து  போலீஸார், சமூகத்தில் பெரிய மனிதர் என்ற அந்தஸ்தில் வலம் வந்தவர் வீரமணி. இவருடன் கைது செய்யப்பட்ட சாந்தியை வீரமணி முழுமையாக நம்பி தன்னுடைய பிசினஸில் சில முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்து வைத்திருந்தார். இந்தச் சூழலில்தான் சாந்தியின் வீட்டுப் படுக்கையறையில் வீரமணியும் சிறுமியும் தனிமையிலிருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து ஒரு கும்பல் வெளியிட்டிருக்கிறது.

வீடியோவை எடுத்தது யாரென்று விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சாந்தி மீது வீரமணி கடும் மனவருத்தத்திலிருக்கிறார். வீடியோ விவகாரத்தை மூடி மறைக்க வீரமணி தரப்பு சிலருக்கு கோடிகளில் பணத்தைக் கொடுத்திருக்கிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. இதில் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக போலிசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதோடு வீரமணியைக் கைது செய்யாமலிருக்க யாரெல்லாம் டீலிங் பேசினார்கள் என்ற விவரத்தையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. குறிப்பாக வீரமணி, சாந்தி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்காத உதவி கமிஷனர் யாஸ்மினிடம் விசாரணை நடத்தி அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையில் வீரமணிக்கு எதிராக சில தகவல்களை சாந்தி தரப்பு சொல்லியிருக்கிறது. குறிப்பாக வீரமணியால் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும் சாந்தி தரப்பே தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் கண்டு அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ரகசிய வாக்குமூலத்தையும் பெற்றியிருக்கிறது போலீஸ். இது வீரமணிக்கு எதிரான ஆதாரங்களில் முக்கியமானது.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் எந்த ஆதாரங்களும் கிடைக்காத சூழலில் தற்போது வழக்குக்குத் தேவையான ஆதாரங்களும் சாட்சிகளும் கிடைத்துவிட்டன. அதனால் இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்றனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்து அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி பாலியல் வன்கொடுமை விவகாரம் எந்தக் காலகட்டத்தில் நடந்தது, எதனால் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிறுவன உரிமையாளர் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், யாருடைய தலையீட்டினால் அந்த வழக்கு விசாரிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. அப்போதைய ஆட்சிக் காலத்தில் காவல்துறை மு.க. ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவருக்கு நன்கு அறிமுகமான ஒரு தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், இவ்வளவு பெரிய குற்றம் சென்னை நகரத்திலேயே நடந்தும், அது ஏன் அவரது ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டது.

பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையான தீவிரமான ஒரு சம்பவம் இது. யார் யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளியைத் தப்பிக்க விட்டார்கள் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். தற்போதைய ஆட்சியில் எந்தவொரு சட்ட நடைமுறைத் தவறுகளுக்கோ அல்லது யாருக்கான விதிவிலக்குகளுக்கோ இடம் கிடையாது. சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும். எனவே, ஸ்டாலின் அவர்கள் தனது அரசியல் பயணத்திற்கு எண்ட் கார்டு போடுவதற்கு முன்பாக, தனது ஆட்சிக் காலத்தில் நடந்த இந்தத் தவறுக்கு முதலில் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி ஜெம் வீரமணி பற்றி விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் வேலையில் முதல் விஜய் இதில் எவரும் தப்பக்கூடாது அனைவருக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்துள்ளார். அதிமுகவுக்கு கரும் புள்ளியாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு அமைந்தது. அதேபோல் திமுகவுக்கு ஜெம் வீரமணி வழக்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *