
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், செரிமானத்தை மேம்படுத்த எனப் பல நன்மைகளை வழங்குகின்றன. கொய்யாவை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்பற்றி இங்கே பார்க்கலாம்.
மலிவு விலையில் கிடைக்கும் கொய்யாக்கள் வெப்பமண்டலப் பழங்கள் ஆகும். அற்புதமான சுவை மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதற்காகக் கொய்யாபழங்கள் உலகளவில் பிரபலமாக உள்ளன. கொய்யா பழங்கள் மட்டுமல்ல கொய்யா செடியின் இலைகளும் மருத்துவ குணங்களை வழங்குகின்றன.
அவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், செரிமானத்தை மேம்படுத்த எனப் பல நன்மைகளை வழங்குகின்றன. கொய்யாவை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்பற்றி இங்கே பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது: கொய்யாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் தொற்று மற்றும் பொதுவான நோய்கள் ஏற்படும் அபாயங்களைத் தடுக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது: கொய்யா பழங்களில் நார்ச்சத்து அதிகம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை சமநிலை செய்கிறது: கொய்யா பழங்கள் லோ -கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டவைம் எனவே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இந்தப் பழம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க ஒரு சிறந்த பழமாக அமைகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பொட்டாசியம் கொய்யாவில் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சரும ஆரோக்கியம்: வைட்டமின் சி நிறைந்த, கொய்யா கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது. இதன் மூலம் சருமம் ஆரோக்கியமாக, இளமையாக இருக்க ஊக்குவிக்கிறது மற்றும் சருமத்தில் சுருக்கங்களைக் குறைக்கிறது. தவிர கொய்யா பழங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.
எடையைக் குறைக்க: கொய்யா பழங்களில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். எனவே இந்தப் பழம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது. தவிர உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
அழற்சியை எதிர்த்துப் போராட உதவும்: அழற்சியை குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொய்யா பழங்களில் உள்ளன. இது மூட்டுவலி போன்ற நிலைகளைக் குறைத்து மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கண் ஆரோக்கியம் : கொய்யா பழங்களில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவி, பார்வைக் குறைபாட்டைத் தடுக்கிறது. மேலும் கண்புரை அபாயத்தையும் குறைக்கிறது மற்றும் பார்வை ஷார்ப்பாக இருக்க உதவுகிறது.
சிறந்த அறிவாற்றல் செயல்பாடு: கொய்யா பழங்களைத் தினசரி சாப்பிடுவது நம் மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் கவனம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துகிறது, அதே நேரம் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நியூரோடிஜெனரேட்டிவ் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
இரும்புச்சத்து அதிகம்: சிவப்பு கொய்யா பழங்களில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் போக்குவரத்தை மேம்படுத்துகிறது.




