ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி: காரணம் என்ன?

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால், நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி, வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகச் சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். மேலும், அவர் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகச் சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ரஷ்ய நிதியமைச்சகம் கூறுகையில், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 22 சதவீதம் குறைந்துள்ளது. இதன், மொத்த மதிப்பு 88 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது என ரஷ்ய அரசு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *