வடமாநிலத் தொழிலாளர்களை வாக்காளர்களாகச் சேர்ப்பது தவறானது..!

தமிழ்நாட்டில் நிரந்தரமாக இல்லாத வடமாநிலத் தொழிலாளர்களை வாக்காளர்களாகச் சேர்ப்பது தவறானது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம், தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

பீகாரில் இருந்து தமிழகத்துக்கு வரும் தொழிலாளர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ்பவர்கள் இல்லை என்றும், அவர்களைத் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *