மெரினாவில் போராடிய தூய்மை பணியாளர்கள் கைது..!

Advertisements

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரரை உடனடியாக பதவி விலகக் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மெரினா கடற்கரை சாலையில், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில், 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரரை உடனடியாகப் பதவி விலகக் கோரியும், தூய்மைப் பணியைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர், இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியப் போது, இரு தரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களை வலுகட்டயமாக இழுத்து சென்று அரசு பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால், மெரினா கடற்கரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *