கொம்புசீவி படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

Advertisements

சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி எனும் புதிய படத்தை பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதையடுத்து, யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படமானது 1996 ஆம் ஆண்டு வாக்கில் வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘கொம்புசீவி’ படம் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வருகின்ற 19 ஆம் தேதி வெளியாகும் என டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, டிரெய்லர் வெளியிட்டால் சினிமா ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *