அமைதிப் பேச்சு நடத்த மாஸ்கோவுக்கு வரலாம் – புடின் அறிவிப்பு!

செலன்ஸ்கி விரும்பினால் அமைதிப் பேச்சில் பங்கேற்க மாஸ்கோவுக்கு வரலாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்

மாநாடு, வெற்றிநாள் கொண்டாட்டம் என நான்கு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியைச் சந்திக்கத் தான் விரும்புவதாகவும்,

அத்தகைய சந்திப்பு மாஸ்கோவில் நடைபெற்றால் பெரும்பயன் விளைவிக்கும் என்றும் தெரிவித்தார்.செலன்ஸ்கி விரும்பினால் மாஸ்கோவுக்கு வந்து பேச்சில் பங்கேற்கலாம் என்றும் புடின் தெரிவித்தார். உக்ரைனின்

இறையாண்மையையும், அதன் பாதுகாப்புக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும் உரிமையையும் ரஷ்யா மதிப்பதாகவும் புடின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *