Poonamallee : கல்லூரியில் கலைகட்டிய ஓணம் பண்டிகை நிகழ்ச்சி..!

Advertisements

பூந்தமல்லி மகளிர் கல்லூரியில் கலைகட்டிய ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில் 2000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் நடனமாடி அசத்தினர்.

பூந்தமல்லி பருத்திப்பட்டில் உள்ள  தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில்  மாணவிகளும் பேராசிரியர்களும் கேரளாவின் பாரம்பரிய  உடையணிந்து வந்தனர்.

மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்திருந்த மாணவர்களுக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள், பேராசிரியைகள் கல்லூரி வளாகத்தில்  அத்திப் பூக்கோலமிட்டு அசத்தினர்.

பின்னர்,2000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள்,பேராசிரியர்கள்  இணைந்து  திருவாதிரா  நடனமாடியது, ஓணம் பண்டிகையின் புராண நிகழ்வை கண் முன்னே நிறுத்தி அனைவரையும் உற்சாகமடைய வைத்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *