
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 16 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டங்கள் கட்டுவதற்குச் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டியுள்ளார்.
ஆரணி கீழ்நகரில் புதிதாகக் கலையரங்கம் கட்டித் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுச் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் இராமச்சந்திரன் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர் செந்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வண்ணாங்குளத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தையும் சேவூர் இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.



