Pakisthan Train Blast – பாகிஸ்தான் ரயில் நிலைய குண்டு வெடிப்பு-20பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.  மேலும் 30 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக, பிளாட்பாரத்தில் குண்டு வெடித்தது முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குண்டு வெடிப்பு நடைபெற்ற போது ,ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்தனர் என குவெட்டா எஸ்.எஸ்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *