அமெரிக்கா-ஈரான் மோதல் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் மீது அடுத்தடுத்து கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, நாங்கள் ஈரான் மீது தொடர்ந்து மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்துவோம் என்று தெரிவித்தார். மேலும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், அடுத்த வாரம் முதல் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய பாலங்களை அமெரிக்க ராணுவம் குறிவைத்துத் தாக்கி முழுமையாக அழிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *