
தேர்தல் பரப்புரையின் போதோ அல்லது பரபரப்பின் போதோ ஏதாவது சொல்லிருப்போம் என்பது போலத்தான் இருக்கிறது இந்த விமர்சனம். தேர்தல் பரப்புரையின் போதோ அல்லது பரபரப்பின் போதோ ஏதாவது சொல்லிருப்போம்….. என்பது போலத்தான் இருக்கிறது இந்த விமர்சனம். தேர்தலுக்கு முன்னதான பரப்புரையின் போது ஒரு கட்சி மற்றொரு கட்சியை விமர்சிப்பது வழக்கமான ஒன்று.
அந்த வகையில தவெக தலைவர் விஜய் இந்த அரசியலின் புது வருகையாக இருந்ததால விமர்சனங்களுக்கு கொஞ்ச கூட பஞ்சமே இல்லை. RSS ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம். இந்தியாவின் முதன்மையான மற்றும் இந்து தேசியவாத துணை ராணுவ அமைப்பாக இருக்கிறது..
இந்தியாவின் ஆளும் அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை உள்ளடக்கிய, தன்னுடன் இணைந்த அமைப்புகளின் ஒரு மாபெரும் வலையமைப்பான சங் பரிவாரின்சித்தாந்த மற்றும் அமைப்பு ரீதியான அடித்தளமாக செயல்படுகிறது. பெரும்பான்மை ஆட்சியை அமல்படுத்துவதற்காக, மதச்சார்பற்ற, ஜனநாயக கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க நோக்கம் கொண்டிருக்கிறார்கள்.
அவற்றுக்கு எதிராக முற்போக்கு மற்றும் திராவிட சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் அடிக்கடி குரல் கொடுத்தும் வருபவர்.
இந்த RSS அமைப்பினுடைய சித்தாந்த தாக்கத்திற்கு எதிராக அடிக்கடி தனது கருத்துகளை முன்வைப்பவர் தான் விசிக தலைவர் திருமா வளவன்.RSS இன் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு நேரடியாக தனது எதிர்ப்பை தயங்காமல் தெரிவித்திருக்கிறார் ..
முன்னதாக இருந்த தமிழக ஆளுநர் R N ரவி முழுநேர RSS அமைப்பின் உறுப்பினராக செயல்படுகிறார் என்று திருமா வளவன் விமர்சித்திருந்தது மிகப்பெரும் பேசுபொருளானது. இந்த நிலையிலதா 2026 சட்டமன்ற தேர்தலின் போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய திருமா வளவன், தவெக தலைவர் விஜய் RSS பெற்றெடுத்த பிள்ளை என விமர்சிச்சுருந்தாரு. இது பல அரசியல் ஒரு விவாத தலைப்பாக மாறியிருந்தது.
தேர்தலில் 108 இடங்களில் பெரும்பான்மை பெற்ற தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க விசிக, ஐ.யு.எம் எல் போன்ற கட்சிகளிடம் ஆதரவை கோரினர். கடைசி நேரத்தில் நிபந்தனையின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தங்களது ஆதரவை தவெக விற்கு வழங்கினார்கள். ஆதரவிற்கு பிறகு விஜய் முதல்வராகி ஆட்சியை அமைத்து விட்டார்.
தற்போது அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிக இடம்பெறும் என்ற பல கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. விசிக வின் வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றும் விட்டார். இந்த சூழல்ல தான் பாஜக வினுடைய முன்னாள் அமைச்சர் போன் ராதா கிருஷ்ணன் அவர்கள் விசிக தலைவர் திருமா வளவன் மீது ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
விஜயை RSS பெற்றெடுத்த பிள்ளை என கூறிவிட்டு தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறீர்கள்.அதனால் அனைவரும் உங்களை rss இன் பேரப்பிள்ளைகளாகவே பர்கா தொடங்கிருக்காங்க என்று ஒரு அதிரடி வெடியை கொளுத்திபோட்டுஇருக்கிறார். மேலும் தற்போது நடக்கும் அரசியல் குதிரைப்பெற அரசியல் இல்லை. அது கழுத்தை பெற அரசியல் என்றும் கூறியிருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரைகளாக இல்லாமல் கழுதைகளாக விலைபேச படுகிறார்கள்.இப்படி ஒரு கேவலமான நிலை வந்ததே இல்லை என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.மேலும் தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக மாற்ற பிரதமர் மோடிக்குதான் அக்கறை இருக்கிறது.
தமிழக அரசு ஆரம்பத்திலேயே தவறுகள் நடக்கும்போது அதை சரிசெய்ய வேண்டுமே தவிர சமாளிக்க பார்க்கக்கூடாது. பிரதமர் கொடுக்கும் நல்ல திட்டங்களை சரியாக நடைமுறை படுத்துவேன் என்று முதல்வர் விஜய் உறுதி அளிக்க வேண்டும். இந்த புதிய ஆட்சி முந்தைய அரசின் நீட்சியாகத்தான் இருக்கிறது. பெருமளவில் எழுச்சி இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் தவெக அரசு 5 ஆண்டுகள் தொடர்வது நல்லது தான். ஆனால் தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தளர்ந்து போனால் , மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள் . இதை ஆட்சி செய்பவர்கள் ஓரு எச்சரிக்கை மணியாக கருத வேண்டும் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.
rss இன் பேரப்பிள்ளைகள் என்ற கூற்றுக்கு என்ன பதிலளிக்கப்போகிறார் திருமாவளவன்? அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் பார்க்கலாம்…..




