இஸ்லாமிய மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் : முதல்வர் விஜய்

தமிழக முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்திலும், செய்தி அறிக்கையிலும் இஸ்லாமிய மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகை என்பது இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு மற்றும் மனிதநேயம் போன்ற உன்னதமான விழுமியங்களை மனித குலத்திற்கு நினைவூட்டும் ஒரு புனிதமான பண்டிகை என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாளில் ஏழை எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், சமூகத்தில் அன்பும் சமத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்றும், மத நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

 “ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *