மு.க.ஸ்டாலின் ஏழு நாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்..!

Advertisements

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழு நாள் சிகிச்சைக்குப் பின் அப்போலோ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைச்சுற்றல் காரணமாக ஜூலை 21ஆம் நாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவர் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அவர் உடல்நிலை குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொலைபேசியில் கேட்டறிந்தனர்.

தமிழ்நாட்டு அமைச்சர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தறிந்தனர். அதன்பின் முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் உள்ளவர்களுடன் காணொலியில் பேசி வந்தார்.

அரசு கோப்புகளையும் பார்வையிட்டுக் கையொப்பமிட்டு வந்தார். அவர் உடல்நலம் சீரானதையடுத்து நேற்று மாலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் மூன்று நாட்களுக்குப் பின் வழக்கமான பணியைத் தொடரலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *