
பக்ரீத் பண்டிகையையொட்டி, பொது இடங்களில் மாடுகளை வெட்ட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் சூர்யபிரசாந்த் என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்தார். மனுவில், பக்ரீத் பண்டிகையொட்டி சட்டவிரோதமாக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்பட உள்ளன. இதுகுறித்து, நான் கொடுத்த புகார் மனுவை பரிசீலிக்க காவல்துறை உத்தரவிடவேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்டக்கூடாது. மேலும், பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரும், காவல்துறைத் தலைமை இயக்குநரும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



