மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் உள்ளார் – அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

சகோதரர் மனோதங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்று திமுக  சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
சென்னையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், வெளியிட்ட வீடியோ குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,  நான், நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது, 400 லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
அங்குள்ள ஓட்டுநர்களிடம், ஏன் இவ்வளவு லாரிகள் நிற்கின்றன? என்று கேட்டபோது, முறைப்படி எல்லா ஆவணங்கள் இருந்தும் லாரிகளை மடக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்தனர். எனவே, அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தொழிலைச் சரியாகச் செய்கிறவர்களுக்கு எந்த அரசாங்கமும் தடை விதிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.
மேலும், கேரளாவும் இந்தியாவில் தானே இருக்கிறது. அது என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? என்று ஒரு வார்த்தைதான் சொன்னதாகத் தெரிவித்தார். கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை, கனிம வளங்களை கொண்டு செல்லவில்லை என்றால் நாகர்கோவிலில் இருப்பவர்கள் எப்படி கட்டிடங்கள் கட்டுவார்கள் என்று குரல் கொடுத்ததாகக் கூறினார்.
எனவே, சகோதரர் மனோதங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்று விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *