R. Siva: ரூ. 30 லட்சம் செலவில் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கம்!

புதுச்சேரி, சுல்தான்பேட்டையில்ரூ. 30 லட்சம் செலவில் வாய்க்கால் அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ராஜா நகரிலிருந்து முத்துப்பிள்ளைபாளையம் வரை செல்லும் பல்ல வாய்க்காலிலிருந்து பிரியும் கிளை வாய்க்கால் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 30 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் 120 மீட்டர் நீளத்திற்கு புதிதாக அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று காலை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் செல்வராசு, இளநிலைப் பொறியாளர் கணேஷ் மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள், ஜமாத்தார்கள், கூட்டணிக் கட்சியினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *