வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அந்தந்த மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இடைத்தேர்தலை முன்னிட்டுத் தான் முதலமைச்சர் விஜய் அந்தந்த மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். தவெக ஆட்சியில் இன்றியமையாப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்வதாகவும், தமிழகம் மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
தீபாவளியையொட்டி அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். ஜிஎஸ்டி வரி வருவாய் பல மாநிலங்களில் அதிகரித்த நிலையில், நமது மாநிலத்தில் 3 சதவீதம் மட்டுமே பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் நிர்வாக திறமையின்மையால் வருவாய் இழப்பு, அரசு நலத்திட்டங்களும் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


